நோயின்றி வாழமுடியாதா?-மூ.இராமகிருட்டிணன்


இந்த நல்வாழ்வு ஆசிரமம் பற்றி ஜெயமோகனின் வலைதளத்தில் படித்து இந்த நூலை வாங்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். தபாலில் பெற்றேன். அவரது தளத்தில் குறிப்பிட்ட படி இது பரிசோதனை முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே...வகையாய்,ருசியாய் உணவு உண்பவர்கள் விலகிப்போய் விடுவதுநன்று... 

நம் இதயங்கள் இரங்குவது எல்லோருக்காகவும்தான் முஸ்லிம்களுக்காக மட்டும் அல்ல!


இந்திய முஸ்லிம்களுக்கு அண்மையில் நடந்த இரண்டு சம்பவங்கள் மிக முக்கியமான நிகழ்வுகள் – ஒன்று டெல்லியில் ‘கண்டுபிடிக்கப்பட்ட’ அக்பர் மசூதி விவகாரம், அடுத்தாக, ம்யான்மரில் (பர்மா) முஸ்லிம்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று மும்பையில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஊர்வலம் கலவரத்தில் முடிந்தது.
ஆளவந்தான் படத்தின் காட்சியால் பாதிக்கப்பட்டு Kill Bill காட்சிகளை அமைத்த Quentin TarantinoQuentin Tarantino - ஹாலிவுட் இயக்குநர்களில் முக்கியமான ஒருவர். மற்ற எல்லா இயக்குநர்களும் காட்சிகளை வரிசையாக நேர்கோட்டில் அடுக்கி வைத்து படம் எடுத்துக் கொண்டிருக்கையில், அதை கலைத்துப் போட்டு 'நேர்கோட்டில் இல்லாமல்' கதை சொல்லும் உத்தியைப் பயன்படுத்தியவர்.


வன்முறையை அழகாக சொன்னவர்(!) என்று பேர் பெற்றவர். நிறைய வன்முறை இருக்கும் இவர் படங்களில். ஆனாலும் கடந்த 15 வருடங்களில் மிக முக்கியமானவராக இவர் கருதப்படுகிறார். Pulp Fiction,Reservoir Dogs, Kill Bill 1&2,Inglorious Bastards இவைகளெல்லாம் இவர் இயக்கியதில் முக்கியமானவை.

சாயிபாபாவும் நானும் ஒன்றாகவே மேஜிக் படித்தவர்கள்- P.C.சர்க்கார்உண்மையான அற்புதம் காலத்தைக் கடந்து மனதைத் தாண்டி நிலவுதல் மட்டுமேதான். அத்தகைய நிலை பெற்றவர்கள், பொதுவழக்கில் ‘அற்புதங்கள்’ என்று கருதப்படுகின்றவற்றை மதிப்பதில்லை.

அவர்களைப் பொறுத்தவரை, மிகச் சாதாரணமான சின்னச் சின்ன விஷயங்களிலேயே அற்புதம் பொதிந்துள்ளது. சாதாரண வாழ்வினைப் புத்துணர்வுடன் சந்திக்க கூடிய நுட்ப உணர்வோ உக்கிரமோ அற்றவர்கள்தான், அற்புதங்களைக் கௌரவிப்பார்கள்.

                                                      பி.சி.சர்க்கார்

விடாது கருப்பு - பாலகுமாரன் அனுபவம்...


முதன்முதலில் சிகரெட் பிடித்தபோது எனக்கு ஒன்றுமே ஆகவில்லை. "ப்பூ…இவ்ளோதானா…இதுக்குப்போயா அலையறானுங்க" என்று தோன்றியது. பிறகு பக்கத்தில் நின்றிருந்தவன் நீ பிடிக்கவேயில்லை. மூக்கில் வாங்கி வாயில் விட்டுட்டே…உள்ளே நுரையீரலுக்குப் போகணும்…என்றான். மறுபடி ஒன்று வாங்கி அவன் சொன்னமாதிரி இழுத்ததில்…சிகரெட்டை கீழே போட்டுவிட்டு இரண்டு கைகளால் தலையைப்  பிடித்துஅலறி இருமல் மேலே இருமல் வந்து ஓடிவந்துவிட்டேன்.ஆனாலும் அந்த ருசி பிடிக்கவேயில்லை. பிறகும் முயற்சி பண்ணியிருக்கிறேன்.

மற்றவர்கள் சிகரெட்டை ஸ்டைலாகப்பிடித்துக் கொண்டு உலக விசயங்கள் விவாதித்து, பிகர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கையில் இது மட்டும் எனக்கு பிடிக்கவேயில்லை. வேப்பங்காயாய் ஒரு விசயம் இருந்தால் அது சிகரெட்தான். இருந்தாலும் வருசத்துக்கு ஒருமுறை ஒரே ஒரு சிகரெட்டை மூக்கில் வாங்கி வாயில் வெளிவிடுகிற வேலையை செய்திருக்கிறேன்.


கோபுர விளக்கு - தி.ஜானகிராமன் எழுதிய சிறுகதைபதின் பருவத்தில் (டீன் ஏஜ்) முக்கியமான ஒரு விஷயம் விடலைத்தனமான பேச்சு. அதிலும் பெண்களைப் பற்றி நக்கலும் அலட்சியமுமான, அதேசமயம் உள்ளுக்குள் உருகுகிற மனசுடன், ஹீரோயிசம் காட்டுவதற்காக பேச்சு ஒரு மார்க்கமாக போய்விடும். அந்த பருவத்தை கடந்ததும் இது போய்விடக்கூடியதுதான். ஆனாலும் அது நிகழாமல் இன்னும் விடலைப்பையன் மனசுடனே காலம் தள்ளுபவர்கள் நிறைய உண்டு. சினிமா இதில் நன்றாக பெட்ரோலை ஊற்றும்.

 இன்றைய சினிமாவை தியேட்டரில் பார்க்கையில் அவ்வப்போது வருகிற பெண்ணைப் பற்றிய பொறுக்கித்தனமான கமென்ட்டுகள் (திரையிலும்,தியேட்டரிலும்) இதற்கு சாட்சி. இது பதின்பருவத்தில் தானாகவே வருகிறது என்றே தோன்றுகிறது. எனக்கு அப்படித்தான் வந்திருக்கிறது.

 ஆனால் பதினேழுவயதில் இந்த கதையை லைப்ரரியில் நைந்து போன பழைய புத்தகத்தில் படிக்கும்வரை. தி.ஜானகிராமனின் சிறுகதைத் தொகுப்பில் இருந்தது. இதைப் படித்து முடித்ததும் ஏனோ பெண்ணைப் பற்றி அதுவரை இருந்த விடலைத்தனமான உருவம் போய், சீரியஸான அபிப்ராயம் வந்தது. படித்து முடித்ததும் கண்ணீர் வந்தது. எப்பவோ செத்துப் போனவளை நினைத்து, அல்லது இது ஒரு கற்பனைக் கதையோ அதுக்குப் போயா அழுகை என்று சமாதானப் படுத்த முயன்றாலும் அந்த வயதில் இந்த கதை நிகழ்த்திய மாற்றம் நிறைய.

இதற்குப் பிறகு பாலகுமாரனை நிறையப் படித்து, பின்னர் அவரிடமிருந்து விலகினாலும், தி.ஜானகிராமனும், பாலகுமாரனும் மிக முக்கிய இடம் வகிக்கிறார்கள் இந்த மாதிரியான மென்மையான, நுண்ணுணர்வோடு கூடிய கதைகள எழுதியதில். அதுவும் அந்த வயதில் கவர்ந்தவைகளில் மிக முக்கியமானவர்கள்.

வெற்றிகரமான நேர நிர்வாகம்;Time Management


முந்தைய பதிவை படித்துவிட்டு படிப்பது நன்றாக விளங்கிக் கொள்ள உதவும்.

எதற்காக நேர நிர்வாகம்? ஏன் செய்யவேண்டும்? Why Time Management?

குறுகிய கால பலன்களுக்காக,நேரத்தை செலவழித்துவிட்டு நீண்ட கால லட்சியங்களுக்கான நேரம் ஒதுக்க இயலாமல் திணறிப் போகிறீர்கள் எனில் நேர நிர்வாகம் அவசியமாகிறது. தினசரி நெருக்கடியில் சிக்கித் தவித்துவிட்டு, நீண்ட கால பலன் தரும் சில விஷயங்களை செய்யாமல் தவிக்கிறீர்கள் எனில் நேர நிர்வாகம் அவசியமாகிறது. தினசரி விஷயங்கள் தானாக உங்களிடம் வரும். நெருக்கடி தரும். அவைதான் urgent ஆச்சே!

raja

Picture

Picture
கருணாவும் ஜெயாவும் பாடும் 'கொலைவெறி' பாட்டு! (வீடியோ)

அம்மோனியம் பாஸ்ஃபேட் - சுஜாதாவின் த்ரில்லர் சிறுகதை

மனக்கட்டுப்பாடு தியானத்திற்கு உதவாது-ஜே.கிருஷ்ணமூர்த்தி ('திண்ணை' இணைய வார இதழில் வெளியான கட்டுரை)

பங்குச் சந்தையில் ஜெயிக்க வாரன் பஃபெட்(Warren Buffet) சொன்ன எளிய உத்திகள்

ஜெஃப்ரி ஆர்ச்சரின் த்ரில்லர் சிறுகதை-தமிழில்

வாழ்வில் வெற்றிகரமாக இயங்கியவர்களின் 7 பழக்கங்கள்..(Seven habits of highly effective people - Stephen R. Covey)

சினிமாக் கனவுடன் அலைபவர்களுக்கு... - டைரக்டர் மகேந்திரன்

வயசுப் பிள்ளைகளின் பெற்றோருக்கு... - பாலகுமாரன்

TOP 10

இலக்கியம்

விருப்பமான வலைதளங்கள்