ஆளவந்தான் படத்தின் காட்சியால் பாதிக்கப்பட்டு Kill Bill காட்சிகளை அமைத்த Quentin TarantinoQuentin Tarantino - ஹாலிவுட் இயக்குநர்களில் முக்கியமான ஒருவர். மற்ற எல்லா இயக்குநர்களும் காட்சிகளை வரிசையாக நேர்கோட்டில் அடுக்கி வைத்து படம் எடுத்துக் கொண்டிருக்கையில், அதை கலைத்துப் போட்டு 'நேர்கோட்டில் இல்லாமல்' கதை சொல்லும் உத்தியைப் பயன்படுத்தியவர்.


வன்முறையை அழகாக சொன்னவர்(!) என்று பேர் பெற்றவர். நிறைய வன்முறை இருக்கும் இவர் படங்களில். ஆனாலும் கடந்த 15 வருடங்களில் மிக முக்கியமானவராக இவர் கருதப்படுகிறார். Pulp Fiction,Reservoir Dogs, Kill Bill 1&2,Inglorious Bastards இவைகளெல்லாம் இவர் இயக்கியதில் முக்கியமானவை.


இப்போ இதற்கென்ன என்ன என்கிறீர்களா? கமல் நடித்து,திரைக்கதை எழுதி 2001ல் வெளிவந்த ஆளவந்தான் படம் படுதோல்வி அடைந்தது. தயாரிப்பாளர் தாணு கூட என் பணமெல்லாம் போச்சே என்று அழுது புலம்பினார். ஆனாலும் அதில் காட்சிகள் அமைப்பில் கமல் நிறைய புதுமைகளைப் புகுத்தியிருந்தார்.

வன்முறைக்காட்சிகளில் மனம் பிறழ்ந்த வில்லன் கமலின் பார்வையில் காட்சிகளை அனிமேஷனில் படமாக்கியிருப்பார். குறிப்பாய் மனிஷாவை கொலை செய்கிற காட்சி! வில்லன் போதை மருந்துக்கு அடிமையானவனும் கூட.


இந்தப் படத்தைப் பார்த்த Quentin Tarantino இந்த காட்சிகளால் பாதிக்கப்பட்டு  இவரின் படமான KILL BILL லில்(இது 2004 ல் வெளிவந்தது) அதே மாதிரி அனிமேஷனில் பயன்படுத்தினாராம்.
சமீபத்தில் இவரைச் சந்தித்த இந்திப் பட இயக்குநர் அனுராக் காஷ்யப் (Gangs of Wasseypur படத்தை இயக்கியவர்) அவரிடம் இந்த விஷயமாய் கேட்க, ஆம் என்று உண்மையைச் சொன்னாராம். ஆளவந்தானின் இந்திப் பதிப்பான 'அபய்' படத்தைப் பார்த்திருக்கிறார் Quentin Tarantino .அதே போல அனிமேஷனை பயன்படுத்தியிருக்கிறார்.பின்னர் கில் பில் படமும் பேசப்பட்டது.'பனிரெண்டு வருசத்துக்கு முன்பு வன்முறைக்காட்சியில் அனிமேஷன் பயன்படுத்தப்பட்ட முதல் படம் ஆளவந்தான்தான். அதை யாரும் பாராட்டவில்லை. இப்போது மிகச் சிறந்த இயக்குநர் ஒருவரால் புகழப்படுகிறது என்று கமலஹாசன் கருத்து தெரிவித்திருக்கிறார்.


 2 comments:

ராஜ் said...

உண்மை தான், இதே மாதிரி கமல் செய்தால் அவரை கிழித்து தொங்க விடுவார்கள்...
Quintin Tarantino அனிமேஷனை பயன்படுத்தியது கில் பில்-1 என்று நினைக்கிறன்...Kill Bill-2 கிடையாது...
ஒரு சைனிஸ் lady வன்முறை காட்சிக்கு Quintin கார்டூன் பயன்படுத்தி இருப்பார்...

மாயன்:அகமும் புறமும் said...

அது கில் பில்-1 தான்.பதிவில் உள்ள தவறை சரி செய்துவிட்டேன்.அதில் வரும் ஆறுநிமிஷ காட்சி (மங்கா)தான் அது.

Post a Comment

raja

Picture

Picture
கருணாவும் ஜெயாவும் பாடும் 'கொலைவெறி' பாட்டு! (வீடியோ)

அம்மோனியம் பாஸ்ஃபேட் - சுஜாதாவின் த்ரில்லர் சிறுகதை

மனக்கட்டுப்பாடு தியானத்திற்கு உதவாது-ஜே.கிருஷ்ணமூர்த்தி ('திண்ணை' இணைய வார இதழில் வெளியான கட்டுரை)

பங்குச் சந்தையில் ஜெயிக்க வாரன் பஃபெட்(Warren Buffet) சொன்ன எளிய உத்திகள்

ஜெஃப்ரி ஆர்ச்சரின் த்ரில்லர் சிறுகதை-தமிழில்

வாழ்வில் வெற்றிகரமாக இயங்கியவர்களின் 7 பழக்கங்கள்..(Seven habits of highly effective people - Stephen R. Covey)

சினிமாக் கனவுடன் அலைபவர்களுக்கு... - டைரக்டர் மகேந்திரன்

வயசுப் பிள்ளைகளின் பெற்றோருக்கு... - பாலகுமாரன்

TOP 10

இலக்கியம்

விருப்பமான வலைதளங்கள்