நோயின்றி வாழமுடியாதா?-மூ.இராமகிருட்டிணன்


இந்த நல்வாழ்வு ஆசிரமம் பற்றி ஜெயமோகனின் வலைதளத்தில் படித்து இந்த நூலை வாங்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். தபாலில் பெற்றேன். அவரது தளத்தில் குறிப்பிட்ட படி இது பரிசோதனை முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே...வகையாய்,ருசியாய் உணவு உண்பவர்கள் விலகிப்போய் விடுவதுநன்று... 

இந்த ராமகிருட்டிணர் சமையல் செய்து சாப்பிடும் வழக்கத்தை முழுக்கவே விடுத்து காய்,கனிகள் இவற்றையே உண்டு வாழ்ந்தவர். அவருக்கு திருமணம் ஆனதும் மனைவியும் அப்படியே மாறினார் என்றும் சொல்கிறார். பிறகு நெல்லையில் சிவசைலம் என்ற ஊரில் ஆசிரமம் ஒன்று தொடங்கி, இயற்கை உணவு சிகிச்சை தருகிறார்.

ஏதாவது நாட்பட்ட நோய், எந்த மருத்துவத்துக்கும் குணமாகாதது கூட இயற்கை உணவு முறைக்கு வந்ததும் குணமாக வாய்ப்பு இருக்கிறது என்கிறார் இந்த நூலில். இவர் இப்போது உயிரோடு இல்லை. இவரது ஆசிரமம் இன்றும் இருக்கிறது. அதுவே இந்நூலை வெளியிட்டிருக்கிறது.
 
இயற்கை வாழ்வியலும் இயற்கை உணவும் மட்டுமே மனிதனை காப்பாற்றும் என்கிறார். குறிப்பாக கனிகளே மனித உணவு; அதிலும் தேங்காயும் வாழைப்பழமும் மட்டுமே மிகச் சிறந்த உணவு. ஆசிரியராக இருந்திருக்கிறார்.
 
சர்வரோக நிவாரணி என்பார்களே அதே மாதிரி, எல்லா வியாதிக்காரர்களுக்கும் தேங்காய்,வாழைப்பழம்,நோன்பிருத்தல்,சூரியக்குளியல் இந்த நான்கையும் மட்டும் சிபாரிசு செய்திருக்கிறார். அது பலன் தருகிறது என்கிறார். அவரது கருத்துப் படி உணவு மிக எளிமையாக, எளிதில் செரிமானம் அடைவதாக இருக்கணும். குடலில் வழுக்கிக் கொண்டு போகணும். செரித்து பின்னர் பசி எடுக்கணும்...அது குடலிலேயே உணவாக சிலநாட்கள் தங்கும்படியா வச்சிட்டாலே நோய்தான். இப்படி காய்,கனி மட்டும் உண்டால் மலத்தின் நிறமே கூட மாறி, பிறகு உடம்பு மென்னுணர்வு கொண்டதாக மாறிவிடும் என்கிறார்.

காய்-கனி என்று சாப்பிடுவதின் உச்சகட்டமாய் (நமக்குத்தான் உச்சகட்டம்...அவரோ ரொம்ப வருசமா அப்படி இருந்திருக்காரு) தேங்காய்-பழம் இந்த இரண்டு மட்டுமே உண்டிருக்கிறார்.
 
ஆஸ்த்துமா,சயம்,தொழுநோய்,வாதம்,மஞ்சட்காமாலை,புற்றுநோய் (நிஜமாவா?),தீராத வயிற்றுவலி,செரிமானமின்மை,நரம்புத்தளர்ச்சி – இவை எல்லாத்தையும் சில மாதங்களிலேயே வெறும் உணவு மாற்றத்திலேயே (காய்-கனி...தேங்காய்-வாழைப்பழத்தைதான் சொல்றார்) குணப்படுத்தி இருக்கிறார்.
 
தன் பரிசோதனை வாழ்க்கையை ரொம்ப சீரியசாவே வாழ்ந்திருக்கார். பாம்புகள் தேள்கள் வீட்டில் நடமாடினால் அடிப்பதே இல்லை. கேட்டால் காய்கனி மட்டுமே உண்டு வந்தால் நம் உடம்பில் விஷம் கிடையாது. அதனால் அவை கடித்தாலும் விஷம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார்.
 
உபவாசம் அதாவது விரதம் ரொம்ப நல்லது என்கிறார். அது உடம்பை சுத்தம் செய்வது மட்டுமின்றி மனபலமும் தரும் விஷயமாம். ஏன் மாதத்தில் இரண்டு நாள் விரதம் இருக்க கூடாது என்று கேட்கிறார். வீட்டை சுத்தம் செய்கிற மாதிரிதான் இதுவும்.

உடல் உழைப்பு உங்கள்வாழ்வில் இருந்தால் ஒழிய உப்பு சேக்காதீங்க என்கிறார். சும்மா நாற்காலியில் உட்கார்ந்து செய்கிறவேலைக்கு உப்பு தேவையில்லையாம். அது விஷம் என்கிறார். உப்பே இல்லாமல் வாழ்வது ஒன்றும் தப்பே இல்லை என்பது இவர் வழி! கை கால் வலி,மூட்டு வலி என்பவர்கள் உப்பை தவிர்த்துவிட்டால் அவை போய்விடும் என்கிறார். (உணவுபிரியர்களுக்கு,நாக்கு ருசி விரும்புபவர்களுக்கு ...ஒண்ணும் சொல்றதுக்கில்லை!)
 
இயற்கை உணவு, மனநிலையை எவ்வாறு மாற்றுகிறது என்பதையும் சொல்கிறார். எண்ணங்களின் போக்கில் பெரும்மாற்றம் நிகழ்கிறது...இது உறவுகளை நல்லவிதமாக பாதிக்கிறது. 

முதலில் இந்தமாதிரி உணவை உண்ண தொடங்குகிறபோது மனம்,உடல் மக்கர் செய்யவே செய்யும். காய்ச்சல்,சளி,சோர்வு,அதிக தூக்கம் எல்லாம் வரும். ஆனால் அவைகளே உடல் தன்னை சரி செய்கிறது என்பதற்கான அறிகுறி என்கிறார். மலம்,சிறுநீர்,சளி,வியர்வை – இந்த நான்கு மூலமே எல்லா கழிவுகளும் வெளியேறும். இவைகள் இயற்கை உணவு எடுத்ததும் அபாரமாக வேலை செய்து கழிவகற்றுகின்றனவாம்.

எத்தனை மாதத்தில் இது நடக்கும் என்றால் அது உடலுக்கு உடல் வேறுபடும். பொதுவாக மூன்று மாதத்திலிருந்து ஆறு மாதத்துக்குள்...நல்ல பலன் கிடைக்கவே செய்கிறது. நாட்பட்ட நோய் குணமாக மருந்து உள்ளேயே இருக்கிறது. உடலின் எதிர்ப்புசக்தி வேலை செய்ய குடல் தடை செய்ய கூடாது. இந்த உணவுகள் அவ்வெதிர்ப்பு சக்தியை வேலை செய்ய விடுகிறது... என்கிறார்
 
இந்தமாதிரியான நிலைமையில் எவ்வளவு தூரம் நடந்தாலும் மூச்சு இழைப்பு இருக்காது. அதிகம் கொழுப்பு சேமிப்பு நிகழாது...உணர்வு பூர்வமாக மகிழ்வை அனுபவிக்க முடியும்.
 
முதலில் ஒரு வேளை என்று ஆரம்பியுங்கள் என்பது அறிவுரை. அவல்-அச்சுவெல்லம் என்று தொடங்கலாம்.
 
சமையல் உணவிலிருந்து இயற்கை உணவுக்கு மாறும்போது எடை குறைப்பு நிகழும். பயப்பட வேண்டாம் என்கிறார். அதிகப்படியான கொழுப்பு கரைவதால், கழிவு அகற்றப்படுவதால் இப்படியாம். சோர்வு இருக்கும். தொடர்ந்து மனபலத்தோடு தொடர்ந்தால் பிறகு உயிராற்றல் பெருகும்.
சிலருக்கு தேங்காய் உண்டதும் நெஞ்சு கரகரப்பு உண்டாகும் .வாழைப்பழமும் சேர்ந்து உண்டால் இந்த தொந்தரவு இருக்காது.
 
As is the food, as is the man. மனுஷர் சமைத்த உணவை நச்சு உணவு என்கிறார் நூல் முழுதும்.
 
தேங்காய்,பழங்கள் மற்றும் பச்சைபயறு வகைகள், பச்சை தானியங்கள், பச்சை காய்கறிகள் இவைகள் இரவு ஒரு வேளை மட்டும் முதல் கட்டத்தில். இது பழகிய பிறகு அடுத்த கட்டம்.  அதில் காலை,இரவு இருவேளைகளும் இயற்கை உணவு.  பிறகு கடைசிக்கட்டம்...இதில் முழுக்க நீங்கள் மாறுவது. இதற்கு மாதக்கணக்காக ஆகலாம்.
 
மருந்தே உணவு,உணவே மருந்து – இதன் அடிப்படையில், ரத்த அழுத்தம்,சர்க்கரை நோய் முதலியவற்றை கடந்துவிடலாம். குறிப்பாய் தோல்வியாதிகள் உணவுக்கட்டுப்பாட்டில் மறைந்து போகுமாம்.
 
ஒரே ஒரு வேளை மட்டுமாவதுமுயற்சி செய்யுங்கள்...அபார பலன் கிடைக்கும். தினம் இரவு உணவு பழம் மட்டும். காலை இளம் வெயிலில் நடங்கள். சமையலை ஒழித்துக்கட்டி பெண்களை விடுதலை செய்வோம் என்கிறார்.

நவீன மனிதன் படும் உடல்சோர்வு,உள்ளச் சோர்வு அவனின் உண்மையான சொரூபம் அல்ல. அவன் அபாரமான ஆற்றல் கொண்டவன். உணவு அவ்வளவு தூரம் அவனைப் பாதிக்கிறது...மொத்த இருப்பையே மாற்றிவிடும் தன்மை உணவுக்கு உண்டு.

‘அன்னமே எண்ணம்’ – அதிக உப்பும், அதிக காரமும் கொண்ட விரைவுஉணவு, டப்பா உணவும் அவனை சோர்வுக்குள்ளாகுகிறது. இந்த நிலையில் இந்த மாதிரியான ‘ஒருவேளை இயற்கை உணவு’ பரிசோதனைகள் அவசியமாகிறது. அந்த ஒருவேளை தொடர்ச்சியாக இருக்கவேண்டும். கவனம் முதலில் கடும் மன கட்டுப்பாடு தேவைப்பட்டிருக்கும் .ஏனெனில் நவீன மனிதன் – ருசியாய் உணவு உண்டால் மட்டும் தான் சந்தோஷமாக வாழ்வதாக உணர்கிறான். இந்த உணவு உண்ணும்போது அவன் மனம் துக்கமாக உணர்ந்தால் எல்லாம் போச்சு!
 
இயற்கையாய்கிடைக்கும்தேங்காய்,பழம்,மா,கொய்யா,பேரீச்சை,திராட்சை,விளாம்பழம்,தக்காளி,சீத்தாப்பழம்,சப்போட்டா,ஆரஞ்சு,பப்பாளி,வேர்க்கடலை,எள் போன்ற சமைக்காமல் உண்ணத்தக்க பொருள்களையே உண்ணவேண்டும். எடுத்த எடுப்பிலேயே மாற வேண்டாம். ஆனால் எப்படிப்பட்டவராயினும் ஒருவேளை பழம் மட்டுமே உண்பது நிறைய நல்ல மாற்றங்களைத் தருவதாகும்.

"உணவுத் தூய்மையால் அறிவு தூய்மையாகும். அறிவுத் தூய்மையால் நினைவு தூயதாகும். தூய நினைவால் எல்லாத் துன்ப முடிச்சுகளிலிருந்தும் விடுபடுவோம்" – சாந்தோக்ய உபநிடதம்
 
"வாளை விட சமையலறையே அதிகமாக கொன்றுவருகிறது" – ஜெர்மன் பழமொழி

நூல் வெளியீடு ; உலக நல்வாழ்வு ஆசிரமம்,சிவசைலம்
இங்கே இதன் ஆங்கிலவடிவம் கிடைக்கிறது...

(இது போலவே ஈஷா யோக நிறுவனம் 'ஈஷா ருசி' என்று ஒரு நூல் வெளியிட்டிருக்கிறது. ஏகப்பட்ட சாலட்கள்,இயற்கை உணவுகள் என்று அருமையாக இருக்கிறது இந்நூல்.)




4 comments:

தி.ஸ்ரீ. said...

அய்யா மூ.இராமகிருஷ்ணன் அவர்களின் படைப்பை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த நான் எடுத்த முயற்சியை ஆதரித்தமைக்கு நன்றி!.
thisri.blogspot.in

Anonymous said...

arumaiyaana anaivarukkum payanulla padhivu
nandri
surendran
surendranath1973@gmail.com

reshma M said...
This comment has been removed by the author.
Anonymous said...

ஜெப்ரி ஆர்ச்சர் கதை மொழிபெயர்ப்பு, சுஜாதா சிறுகதைகள் ஒன்றிரண்டு என்று படித்து ரசிக்கப் பல விஷயங்களை வைத்திருந்தீர்கள் வலையில்! இப்போது அவற்றை எடுத்துவிட்டீர்களா? 7 பழக்கங்கள் தொடர் மட்டும் உள்ளது.

சரவணன்

Post a Comment

raja

Picture

Picture
கருணாவும் ஜெயாவும் பாடும் 'கொலைவெறி' பாட்டு! (வீடியோ)

அம்மோனியம் பாஸ்ஃபேட் - சுஜாதாவின் த்ரில்லர் சிறுகதை

மனக்கட்டுப்பாடு தியானத்திற்கு உதவாது-ஜே.கிருஷ்ணமூர்த்தி ('திண்ணை' இணைய வார இதழில் வெளியான கட்டுரை)

பங்குச் சந்தையில் ஜெயிக்க வாரன் பஃபெட்(Warren Buffet) சொன்ன எளிய உத்திகள்

ஜெஃப்ரி ஆர்ச்சரின் த்ரில்லர் சிறுகதை-தமிழில்

வாழ்வில் வெற்றிகரமாக இயங்கியவர்களின் 7 பழக்கங்கள்..(Seven habits of highly effective people - Stephen R. Covey)

சினிமாக் கனவுடன் அலைபவர்களுக்கு... - டைரக்டர் மகேந்திரன்

வயசுப் பிள்ளைகளின் பெற்றோருக்கு... - பாலகுமாரன்

TOP 10

இலக்கியம்

விருப்பமான வலைதளங்கள்